உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பெயர்தக்கா கோவிலில் செடல் உற்சவம்

திருப்பெயர்தக்கா கோவிலில் செடல் உற்சவம்

உளுந்துார்பேட்டை: திருப்பெயர்தக்கா கிராமத்தில் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில்  செடல் உற்சவம் நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா, தி ருப்பெயர்தக்கா கிராமத்தில் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த 2ம் தேதி துவங்கியது.  மறுநாள் அம்மனுக்கு அபிஷேகம்,  தீபாரதனை, மாரியம்மன் வரலாறு பாரதம் ஆரம்ப நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 4ம் தேதி இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.  கடந்த 5ம் தேதி இரவு அம்மன் பிறப்பு பாரதம், சுவாமி வீதியுலாவும், 6ம் தேதி மதியம், நாங்கூர் அம்மன் குடியழைத்து வருதலும், இரவு சுவாமி  வீதியுலாவும் நடந்தது. தொடர்ந்து 7 ம் தேதி இரவு சுவாமி வீதியுலா, 8 ம் தேதி மாலை அம்மனுக்கு ஊரணி பொங்கல் இடுதல், இரவு சுவாமி  வீதியுலா நடந்தது.  நேற்று முன்தினம் காலை காத்தவராயன்–ஆரியமாலா திருமண நிகழ்ச்சி, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று அதிகாலை  5:00 மணிக்கு காத்தவராயன் கழுமரம் ஏறுதல் நிகழ்ச்சியும், 7:00 மணிக்கு செடல் அலகு போடுதல் நிகழ்ச்சியும் நடந்தது.  முன்னதாக கோவில்  குளக்கரையில் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக அலகு குத்தி ஊர்வலம் வந்தனர். சிறப்பு அலங்காரத்தில், அம்மன் வீதியுலா நடந்தது. விழாவில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !