மாங்கனி திருவிழா கடைகள் ஏலம்: ரூ.20 லட்சம் கூடுதல் வருவாய்!
காரைக்கால்: காரைக்கால் மாங்கனி திருவிழா கடைகள் ரூ.20 லட்சத்து 50 ஆயிரத்துக்கு ஏலம் போனது. காரைக்காலில் பாரதியார் சாலையில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் வரும் 17ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு, 18ம் தேதி திருக்கல்யாணம், 19ம் தேதி மாங்கனி வீசும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. அம்மையார் கோவிலில் நடைபெறவுள்ள மாங்கனி திருவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்காணக்கான பக்தர்கள் வருவர். கோவில் நிர்வாகம் சார்பில் பல ஆண்டுகளாக கடைகள் ஏலம் விடப்படுகிறது. நேற்று முன்தினம் அம்மையார் கலையரங்கத்தில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் தலைமையில் ஏலம் நடந்தது. ரூ.20 லட்சத்து 50 ஆயி ரத்துக்கு கடைகள் ஏலம் போனது. கடந்த ஆண்டு ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்திற்கு கடை ஏலம் போனது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு ரூ.2 கூடுதலாக கடைகள் ஏலம் விடப்பட்டுள்ளது.