ஸ்ரீரங்கம் ஆண்டாள் சிலையை மாற்றவில்லை: இணை ஆணையர் தகவல்!
ADDED :3446 days ago
சென்னை:ஸ்ரீரங்கம் கோவிலில், ஆண்டாள் சன்னிதியில் உள்ள, ஆண்டாள் சிலையை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என, கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்து உள்ளார்.ஆகம விதிகளுக்கு புறம்பாக, ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் உள்ள ஆண்டாள் சிலையை, உள் ஆண்டாள் சன்னிதியில் இருந்து, வெளி ஆண்டாள் சன்னிதிக்கு மாற்ற, கோவில் நிர்வாகம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விளக்கம் கேட்க, கோவில் இணை ஆணையர் ஜெயராமனை, மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது, அவர் எடுத்து பேசவில்லை. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், ஆண்டாள் சிலையை மாற்ற, கோவில் நிர்வாகம் முயற்சி மேற்கொள்ளவில்லை என, கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்து உள்ளார்.