உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலத்தில் சீதா கல்யாண உற்சவம்

விருத்தாசலத்தில் சீதா கல்யாண உற்சவம்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்த சீதா கல்யாண உற்சவத்தில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர். விருத்தாசலம் நாம சங்கீர்த்தன பக்த ஜன  சபா சார்பில் 5ம் ஆண்டு சீதா கல்யாண மகோற்சவம், சேலம் ரோடு சபிதா பேலசில் மூன்று நாள் நடந்தது. நேற்று முன்தினம் உஞ்சவ்ருத்தி, தோடய மங்கலம் குருகீர்த்தனை, பஞ்சபதி, கணேசாதி தியானங்கள், போதேந்திராள் சரித்திரம், ஜானவாசம் (மாப்பிள்ளை அழைப்பு), திவ்யநாம  சங்கீர்த்தனம், திரு உருவப்பட வீதியுலா நடந்தது. நேற்று பகல் 11:40 மணிக்கு துவங்கி பிற்பகல் 2:00 மணி வரை சீதா கல்யாணம் வெகு விமர்சைய õக நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை, வசந்த கேளிக்கை, பவ்வளிம்பு உற்சவம், அனுமன் உற்சவம், மங்கள ஆரத்தி நிகழ்ச்சிகள் நடந்தன.  ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !