உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மனுக்கு ஜாத்திரை விழா கிராம தேவதைக்கு பொங்கல் வைப்பு

மாரியம்மனுக்கு ஜாத்திரை விழா கிராம தேவதைக்கு பொங்கல் வைப்பு

ஊத்துக்கோட்டை: மாரியம்மனுக்கு ஜாத்திரை திருவிழா நடைபெறுவதை ஒட்டி, கிராம தேவதை கோவிலில், பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். குறித்த நேரத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என, வேண்டிக் கொண்டு கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும், மாரியம்மனுக்கு ஜாத்திரை விழா கொண்டாடுவது வழக்கம். ஊத்துக்கோட்டையில், வரும், 15ம் தேதி ஜாத்திரை விழா நடைபெற உள்ளது. நேற்று, கிராம தேவதை செல்லியம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கிராமத்தில் உள்ள பெண்கள் பொங்கல் வைத்து செல்லியம்மனுக்கு படைத்து வழிபட்டனர். முன்னதாக, செல்லியம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின், அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மாலை, அங்காள பரமேஸ்வரி அம்மன், எல்லையம்மனுக்கு, பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !