குறிஞ்சிப்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :3442 days ago
வடலுார்: குறிஞ்சிப்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக, தீமிதி திருவிழா நடந்தது. விழா, கடந்த 6ம் தேதி காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. ௭ம் தேதி மதியம் பகாசூரன் அன்னதானம், 8ம் தேதி அர்ச்சுனன்– திரவுபதி திருக்கல்யாண வைபவம், ௯ தேதி மாடுபிடி சண்டை, 10ம் தேதி அரவான் களபலி, மாலை 6.00 மணிக்கு தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் மாலை மஞ்சள் நீர் உற்சவம், தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இன்று காலை 10.00மணிக்கு தர்மர் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.