பழநி கோயிலில் பக்தர்கள் 2 மணிநேரம் காத்திருப்பு
ADDED :3763 days ago
பழநி: விடுமுறை தினத்தை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் குவிந்த பக்தர்கள் 2 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழநிக்கு தினமும் அதிகளவு பக்தர்கள் வருகின்றனர். விடுமுறை தினங்களில் கூட்டமாக மிக அதிகமாக உள்ளது. பழநியில் நேற்று பக்தர்கள் குவிந்ததால், கோயில் வின்ச், ரோப்கார் ஸ்டேஷன்களில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து மலைகோயிலுக்குசென்றனர். அங்கு பொது மற்றும் கட்டண தரிசனவழியில் 2 மணிநேரம் காத்திருந்து மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமி தரிசனம் செய்தனர். இதைப்போலவே பழநி-திருச்செந்துார், மதுரை, சென்னை ரயில்களிலும் குவிந்த பக்தர்கள் உட்கார இடம் கிடைக்காமல் நின்றுகொண்டே சென்றனர்.