முத்தாலம்மன் கோவிலில் உலகம் நலம் பெற விளக்கு பூஜை
ADDED :3440 days ago
பாகூர்: பாகூர் முத்தாலம்மன் கோவிலில், உலகம் நலம் பெற வேண்டி, விளக்கு பூஜை நடந்தது. இதனை முன்னிட்டு காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, மாலை 6.00 மணிக்கு விளக்கு பூஜை வழிபாடு நடந்தது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு உலகம் நன்மை பெறவும், வெப்பத்தினால் ஏற்படும் நோய்களில் இருந்து மக்களை காக்க வேண்டிய, பெண்கள் விளக்குகள் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, இரவு 8.00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.