வெங்கடேசபெருமாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சி
ADDED :3440 days ago
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, கைலாசநாதர் மற்றும் வெங்கடேச பெருமாள் கோவில்களில், திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. ஆத்தூர் அருகே, கல்பகனூர் புதூர் கிராமத்தில், விசாலாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. நேற்று முன்தினம், காலை, 8 மணியளவில், கணபதி ஹோமத்துடன் திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணியளவில், கைலாசநாதர் - விசாலாட்சி அம்மன், வெங்கடேச பெருமாள் - பூ தேவி, ஸ்ரீதேவியுடன் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, பரத நாட்டிய நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. கல்பகனூர், ராமநாயக்கன்பாளையம், ஆத்தூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.