உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவில் கடைகள் இன்று மீண்டும் ஏலம்

திருத்தணி முருகன் கோவில் கடைகள் இன்று மீண்டும் ஏலம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் உள்ள கடைகளுக்கு, இன்று, மீண்டும் ஏலம் விடப்படுகிறது. திருத்தணி முருகன் மலைக்கோவிலில் உள்ள பிரசாத கடை, பூ, பழரசம் உட்பட, 12 கடைகள் மற்றும் பக்தர்கள் செலுத்தும் தலைமுடி ஆகியவை, ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது. அந்த வகையில், கடந்த, 10ம் தேதி, கோவில் தலைமை அலுவலகத்தில் தலைமுடி, பிரசாத கடை, வில்வம் இலை, பூ, பழரசம் உட்பட, 12 கடைகளுக்கு ஏலம் கோரப்பட்டது. கடந்த ஆண்டை விட கூடுதல் தொகை என்பதால், வியாபாரிகள் நஷ்டம் என, முடி, பிரசாத கடை மற்றும் பலவகை கடைகளை ஏலம் எடுக்க வராததால், ஏலம் ரத்து செய்து, மறுதேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மலைக்கோவிலில் உள்ள, 12 கடைகளுக்கு மட்டும், இன்று (13ம் தேதி) மீண்டும் ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் முன்தொகை செலுத்த, வரைவு காசோலையுடன் கோவில் தலைமை அலுவலகத்திற்கு வந்து, ஏலம் கேட்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !