மேல்நாரியப்பனூரில் இன்று தேர்பவனி
ADDED :3438 days ago
சின்னசேலம்: மேல்நாரியப்பனுார் புனித அந்தோணியார் தேவாலயத்தில் பெரிய தேர்பவனி, இன்று நடக்கிறது. சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுாரில் பிரசித்தபெற்ற புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு பெருவிழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் திருப்பலி பூஜைகள் மற்றும் வழிபாடு நடந்தது. இன்று இரவு 10:00 மணிக்கு வான வேடிக்கையுடன் பெரிய தேர்பவனி நடக்கிறது. பக்தர்களுக்காக சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்கள் நின்று செல்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் வந்து, குவிந்துள்ளனர். கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., மதிவாணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா ஏற்பாடுகளை பங்குத் தந்தை பால்ராஜ் செய்துள்ளார்.