வடலுாரில் தருமச்சாலை விழா
ADDED :3741 days ago
மதுரை: வடலுாரில் வள்ளலார் நிறுவிய தருமச்சாலை ஆண்டு விழா, மதுரை ஹார்விப்பட்டியில் நடந்தது. ஓய்வுபெற்ற மின் பொறியாளர் ராஜராமன், சன்மார்க்க கொடியை ஏற்றினார். வள்ளலார் அறச்சாலை குறித்து ராமநாதன் பேசினார். கொடி வணக்க பாடலை கணேசன் வேங்கடராமன் பாடினார். வள்ளலார் மன்ற செயலாளர் சுப்புராஜ் நன்றி கூறினார்.