உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை திரவுபதியம்மன் கோவில் அக்னி வசந்த விழா

திருவண்ணாமலை திரவுபதியம்மன் கோவில் அக்னி வசந்த விழா

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே மருதாடு கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் அக்னி வசந்த விழா கடந்த ஏப்ரல், 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி, சொற்பொழிவாளர் அன்மருதை விநாயகமூர்த்தியின் மகாபாரத சொற்பொழிவும், முனுகப்பட்டு சோழபாண்டியனின் கவி வாசிப்பும் நடந்தது. மேலும், ஓம் பாரதமாதா நாடக சபா சார்பில், வில் வளைப்பு, சுபத்திரை மாலையிடுதல், தருமர் ராஜசுய யாகம், அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் தூது, அரவான் களப்பலி, அபிமன்யு வதம், கர்ண மோட்சம், 18ம் போர் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நாடகம் நடந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !