உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள்.. அவதி: பேட்டரி கார் சேவை முடக்கம்!

ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள்.. அவதி: பேட்டரி கார் சேவை முடக்கம்!

ராமேஸ்வரம்ரா: ஸ்வரம் கோயிலில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பேட்டரி கார்கள் பயன்பாடின்றி முடங்கியதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தினமும் சராசரியாக 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இவர்கள், கோயிலின் நான்கு ரதவீதியில் வலம் வருவதற்காக 2010-11ம் ஆண்டில் ராமேஸ்வரம் நகராட்சிக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ. 9 கோடி நிதியில் ரூ. 30 லட்சத்தில் 6 பேட்டரி கார்கள் வாங்கினர். இதில் 4 பேட்டரி கார்கள் ராமேஸ்வரம் வந்திறங்கிய நாள் முதல் பழுதாகி மூளையில் முடங்கியுள்ளன. இவற்றை பழுதுபார்த்து சரி செய்து மீண்டும் இயக்குவதற்கு கூடுதல் செலவு ஏற்பட்டதால், நகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட்டது. மற்ற 2 பேட்டரி காரும் கோயில் கார் பார்க்கிங் முதல் கோயில் ரதவீதி வரை பக்தர்களை ஏற்றி இறக்குகின்றன. ஆனால், பெரும்பாலான நாட்களில் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல், கார் டிரைவர்கள் திணறுகின்றனர். சில சமயம் இந்த இரு காரும் பழுதாகும்போது, வாகன வசதியின்றி சுட்டெரிக்கும் வெயிலில் சூட்கேஸ், பேக்குகளை சுமந்தபடி பெண்கள், முதியவர்கள், குழந்தைகளுடன் சாலையில் நடந்து செல்லும்போது சிலர் மயங்கி விழுந்து காயம் அடைகின்றனர்.

20 லட்சம் வீண்: பக்தர்கள் வசதிக்கு பயன்பட வேண்டிய 4 பேட்டரி கார்கள், கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்படாமல் கார் செட்டில் முடங்கியதால், ரூ. 20 லட்சம் வீணாகிப் போனது. எனவே, பக்தர்கள் நலன் கருதி, கூடுதல் பேட்டரி கார் அல்லது சுற்றுசூழலை பாதுகாக்கும் கார்கள் இயக்கிட கலெக்டர் நடராஜன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமேஸ்வரம் நகராட்சி கமிஷனர் ஜெயராமராஜா கூறுகையில்
, மூன்று பேட்டரி கார்களில் இஞ்சின் பழுதாகி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. ஒரு கார் பழுது பார்க்கப்பட்டு விரைவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரும். கூடுதல் பேட்டரி கார் அல்லது சுற்றுச்சூழல் மாசடையாத கார்களை ரதவீதியில் இயக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !