பொன்பத்தி பச்சையம்மன் கோவில் தேரோட்டம்
ADDED :3412 days ago
செஞ்சி: செஞ்சி அருகே உள்ள பொன்பத்தி செம்பாத்தம்மன், பச்சையம்மன் கோவிலில் தேர்திருவிழா, கடந்த 6ம் தேதி துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங் காரம் செய்தனர். நேற்று முன்தினம் காலை கிராம தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகமும், பகல் 1:00 மணிக்கு சாகை வார்த்தலும் நடந்தது. மாலை 5:00 மணிக்கு தேர்சக்கரங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து 5.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட செம்பாத்தம்மன், பச்சையம்மனை தேரில் ஏற்றி வடம் பிடித்தளை துவக்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்.