உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொதிக்கும் கருங்கல்லில் நடக்கும் பக்தர்கள் அவதி!

கொதிக்கும் கருங்கல்லில் நடக்கும் பக்தர்கள் அவதி!

காஞ்சிபுரம்: கோடை காலம் முடிந்து, பள்ளி, கல்லுாரிகள் துவங்கிய போதிலும், வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. வரதராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொதிக்கும் கருங்கல் மற்றும் தரையில் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்று  விளங்கும்  வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்து அதிக பக்தர்கள் வருவதால், எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.  குறிப்பாக, சனி, ஞாயிற்று கிழமைகளில் அதிக பக்தர்கள் வருவர். கோவில் கொடி மரம் வரை  கருங்கல் பதிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு புறம் மண்  தரை உள்ளது. அதில்  பக்தர்கள் நடப்பதற்காக ரப்பர் கால் மிதியடிகள் போடப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்த வெயிலுக்கு அந்த காலடிகள் தாக்கு  பிடிக்கவில்லை; அதிலும் அதிக சூடு இருக்கிறது. அதில் நடக்க முடியாமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். ஏகாம்பரநாதர் கோவிலில் வெயில்  காலத்தில் பக்தர்கள் சென்று வர, நிழல் கூரை அமைக்கப்பட்டுள்ளது; மழை காலத்தில் அது எடுக்கப்படும். அதேபோல், வரதராஜ பெருமாள் கோவிலில் மதிய நேரம் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் நலன் கருதி, நிழற்கூரை வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

கே.தனலட்சுமி, காஞ்சிபுரம்: கோவில்களில் கருங்கல் பதித்து இருப்பது அழகாகத்தான் இருக்கிறது. ஆனால், வெயில் காலங்களில், மதிய நேரம்  நடக்க முடியவில்லை. சில கோவில்களில், நடைபாதையில், வெப்பம் தெரியாத வகையில், வெள்ளை பெயின்ட் பூசியுள்ளனர். அது போல் இங்கும்  ஏற்பாடு செய்தால், பக்தர்கள் அவதிப்படாமல் நடந்து வர வசதியாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !