ரமலான் சிந்தனைகள்- 10: இருப்பதைக் கொண்டு வாழ்வோம்!
ரமலான் பெருநாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு இந்த சிந்தனை பெரிதும் உதவும்.“இஸ்லாத்தில் இணைந்து சொற்ப வருவாயில் நிம்மதியாக, திருப்தியாக வாழுகின்ற மனிதனை நான் வாழ்த்துகின்றேன். அல்லாஹ் கொடுத்த சொற்பவருவாயை ஒருவன் திருப்தியோடு ஏற்பானாயின், அவன் செய்த சொற்ப செயல்பாடுகளையும் அல்லாஹ் திருப்தியோடு ஏற்றுக்கொள்கிறான். அல்லாஹ் ஒரு மனிதன் மீது விருப்பம் கொண்டால், அவனை பல வகையிலும் சோதனை செய்வான். அவன் அதனைச் சகித்துக்கொண்டு திருப்தியோடு வாழ்ந்தால் அல்லாஹ் அவனை உண்மை முஸ்லிமாகத் தேர்ந்தெடுப்பான்,” என்கிறார் நபிகள் நாயகம்.குறைந்த வருவாயில் திருப்தியுடன் வாழ்ந்தாலும், அல்லாஹ் கொடுத்ததைத் திருப்தியுடன் ஏற்றுக்கொண்டாலும், தீய காரியங்களைச் செய்யாமல் இருந்தாலும் கியாமநாளில் நரகம் அவரது கண்ணில் தென்படாது. நமக்கு இறைவனால் என்ன தரப்பட்டிருக்கிறதோ, அதை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அவரவர் தகுதிக்குத் தகுந்தாற்போல் ரமலான் திருநாளைக் கொண்டாட தயாராகுங்கள்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.45 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.15 மணி.