திருவாரூரில் ஆழித் தேரோட்டம் கோலாகலம்!
ADDED :3412 days ago
திருவாரூர் : திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் கோயிலின் ஆழித் தேரோட்டம் இன்று காலை துவங்கியது. தேரோட்டத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜ சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் ஆழித்தேர், ஆசியாவிலேயே பெரியது. இக்கோவிலின் ஆழித் தேரோட்டம் இன்று துவங்கியது.தேரோட்டத்தை ஒட்டி, தியாகராஜ சுவாமி அஜபா நடனத்துடன், நேற்று முன்தினம் இரவு, தேருக்கு எழுந்தருளினார். விழாவை முன்னிட்டு இன்று அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை ஒட்டி, திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.