பத்தர காளியம்மன் கோவிலில் மகிஷ சம்ஹார பெருவிழா!
ADDED :3413 days ago
காரைக்கால்: பூவம் கிராமத்தில் உள்ள பத்தர காளியம்மன் கோவிலில் மகிஷ சம்ஹார பெருவிழா நடந்தது. காரைக்கால் அடுத்துள்ள பூவம் கிராமத்தில் அமைந்துள்ள பத்தர காளியம்மனுக்கு நேற்று காலை அபிஷேக ஆராதனைகளுடன் நிகழ்ச்சி துவங்கியது. மதியம் 3 மணிக்கு அம்பாள் சிம்ம வாகனத்தில் வீதியுலாவும், மாலை 4 மணிக்கு முத்துமாரியம்மன் ஆலயத்தில் உத்தரவு வாங்கும் நிகழ்ச்சியும், 5 மணிக்கு மகிஷ சம்ஹார வைபவமும் அதனை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகளும், வாண வேடிக்கைகளுடன் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரவு 12 மணிக்கு எல்லை ஓடுதல் நிகழ்ச்சியும் மறுநாள் மாலை 5 மணிக்கு மஞ்சள் விளையாட்டும் விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ÷ காவில் நிர்வாகம் செய்திருந்தது.