உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பசுவுக்கு ஏன் அகத்திக் கீரை கொடுக்கச் சொல்கிறார்கள்?

பசுவுக்கு ஏன் அகத்திக் கீரை கொடுக்கச் சொல்கிறார்கள்?

பொதுவாக பசுவுக்கு அறுகம்புல் கொடுப்பது தான் மிகவும் விசேஷம். சாஸ்திரங்களில் கோ தூர்வாப்ரதானேன ப்ரம்மஹத்யாம் வ்யபோஹதி என்று  சொல்லப்படுகிறது. ஒரு பிடி அறுகம்புல்லை பசுமாட்டுக்குக் கொடுத்தால், ப்ரம்மஹத்தி முதலிய தோஷங்கள் விலகும் என்று சாஸ்திரம் சொல்கிறது.  அதுவும் நம் வீட்டு மாட்டுக்கு கொடுக்கக் கூடாது. அதாவது அந்த அறுகம்புல்லை நம் வீட்டு மாட்டுக்குக் கொடுத்து, அதன் மூலம் பெறும் பாலை  நாம் கறந்து சாப்பிடக் கூடாது. வெளியில் உள்ள ஒரு கோயில் மாடுகளோ, பூஜைக்கு அந்தப் பால் பயன்படக் கூடிய மாடுகளையோ பார்த்துக்  கொடுக்க வேண்டும்.

அகத்திக் கீரை என்பது மிகவும் சத்தி நிறைந்த கீரை. அதனால் அது சாப்பிடும் போது, பால் சுரக்கும் தெம்பு வரும். சாஸ்திரங்களில் ஏகாதசி உபவாசம்  இருந்து துவாதசி அன்றுதான் சாப்பிட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மற்ற நாட்களில் அகத்திக் கீரையை சாப்பிடும் வழக்கம் இல்லை.  காரணம் ஏகாதசி அன்று உபவாசம் இருந்து, வயிறு அமிலம் சுரந்த நிலையில் இருக்கும். மற்ற உணவுகளைக் காட்டிலும் அகத்திக் கீரை அந்த  அமிலத்தை சரியாக்கி செரிமானித்துவிடுவதால், துவாதசிக்கு அகத்திக் கீரையைச் சாப்பிட சாஸ்திரம் வலியுறுத்தியது. அந்த துவாதசி அன்று, பி ராம்மணர்களுக்கு போஜனம் இட்டால், அமாலட்சந்து துவாதஸ்யாம் என்று, ஒரு பிராம்மணனுக்கு ஒரு துவாதசி அன்று போஜனம் போட்டால், ஒரு  லட்சம் அமாவாசை சாப்பாடு அளித்த புண்ணிய பலன் சேருகிறது. பிராம்மணனும் பசுமாடும் ஒன்று என்பதால் பசுமாட்டுக்கு அகத்திக் கீரையைக்  கொடுக்கும் வழக்கம் வந்தது. ஆனால், வாஸ்தவத்தில் பசுமாட்டுக்கு அறுகம்புல் கொடுப்பதே சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !