உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநகர் கல்யாண விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்!

திருநகர் கல்யாண விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்!

திருநகர்: திருநகர் பாண்டியன் நகர் ஸ்ரீகல்யாண விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சித்தி புத்தி சமேத கல்யாண விநாயகர், மாதா புவநேச்வரி அம்மன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை பரமேஸ்வரர், தேவி கலைவாணி, லட்சுமிதேவி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், லட்சுமி நாராயணர், ஐயப்பன், கல்யாண ஆஞ்சநேயர், கால பைரவர், தம்பதிகளுடன் நவக்கிரகங்கள் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூன்று கால யாகசாலை பூகைள் முடிந்து, காலை கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் தலைவர் வள்ளிநாயகம், திருப்பணிக்குழு தலைவர் கண்ணன், ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம்,செயலாளர் லட்சுமணகுமார், பொளாளர் லிங்கராஜ், சின்னசாமி, கந்தசாமி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !