உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்!

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து அம்மனை தரிசித்தனர். இக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 17 நாட்கள் நடக்கிறது. ஒன்பதாவது நாளான நேற்றுமுன்தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். இரவு அக்னிசட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை பூக்குழி திருவிழா நடந்தது. தேர் திருப்பணிக்குழு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். அய்யூர் பஞ்சவர்ணம்,55, பூக்குழியில் தவறி விழுந்து காயமடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !