உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி விழா துவக்கம்!

திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி விழா துவக்கம்!

சிவகாசி: 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருத்தங்கல் நின்ற நாராயணபெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து முத்து பட்டர் தலைமையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வந்து அருள்பாலிக்கிறார். ஜூன் 24ல் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்வர். ஏற்பாடுகளை தக்கார் சுவர்ணாம்மாள், செயல் அலுவலர் முருகன் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !