உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மல்லசமுத்திரம் மாரியம்மன், கணபதி கோவில் கும்பாபிஷேகம்

மல்லசமுத்திரம் மாரியம்மன், கணபதி கோவில் கும்பாபிஷேகம்

மல்லசமுத்திரம்: பள்ளக்குழி அக்ரஹாரத்தில் நேற்று காலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. மல்லசமுத்திரம் அடுத்த, பள்ளக்குழி அக்ரஹாரம் கரட்டுவலவில், மாரியம்மன், கணபதி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 14ம்தேதி, இரவு, 10 மணிக்கு, கிராமசாந்தி நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது. நேற்று முன்தினம் காலை, 6 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, காலை, 9 மணிக்கு, காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வர புறப்பட்டனர். மாலை, 6 மணிக்கு, விநாயகர் வழிபாடு, சங்கல்பம், வாஸ்து பூஜை, கங்கனம் கட்டுதல், முதற்கால யாகபூஜை, கண்திறப்பு, கலசம் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 5.45 மணியளவில், இரண்டாம் கால யாகபூஜை ஆரம்பமானது. காலை, 9.30 மணியளவில், கோபுர கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !