ராமகிருஷ்ணர் வழிபாட்டுக் கூடம் திருபுவனையில் அடிக்கல் நாட்டு விழா!
புதுச்சேரி: திருபுவனையில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் வழிபாட்டுக் கூடம் அமைக்க, கேரளா ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர், சுவாமி வீரபத்ரானந்த மகராஜ் அடிக்கல் நாட்டினார். திருபுவனை சுவாமி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது. காலை 9:00 மணிக்கு, ராமகிருஷ்ணர் வழிபாட்டுக்கூட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கேரளா ராமகிருஷ்ணா மடம் தலைவர் சுவாமி விரபத்ரானந்த மகராஜ், செங்கல்பட்டு ராமகிருஷ்ணா மிஷன் சர்வ சுகானந்த மகராஜ் ஆகியோர் வழிபாட்டு கூடத்திற்கு அடிக்கல் நாட்டினர். அதனை தொடர்ந்து நடந்த, பி ளஸ் 1 வகுப்பு துவக்க விழாவில், டாக்டர் சாரதா தேவி வரவேற்றார். தமிழ்நாடு ராமகிருஷ்ணா விவேகானந்த பாவ பிரசார் பரிஷத் கன்வீனர் பாண்டுரங்கன் வாழ்த்துரை வழங்கினார். சுவாமி சர்வ சகானந்த மகராஜ், பிளஸ் 1 மாணவர்களுக்கு, புத்தகங்கள் வழங்கி, ஆசி வழங்கினார். மேலு ம், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள், நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப் பட்டனர். பள்ளி முதல்வர் சீனிவாசன் நன்றி கூறினார்.