உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்துார் ராஜகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருப்புத்துார் ராஜகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருப்புத்துார்: திருப்புத்துார் ராஜகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. 15 ஆண்டுகளுக்குப் பின்னர் சக்தி விநாயகர், ராஜகாளியம்மன்,முருகன் சன்னதிகளுக்கான திருப்பணி நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 13ம் தேதி மாலை யாகசாலை பூஜை துவங்கியது. பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜை செய்தனர். தொடர்ந்து மூன்று கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நான்காம் கால யாகசாலை பூஜைதுவங்கியது. பூர்ணாகுதி,தீபாராதனைக்குப் பின்னர் சிவாச்சாரியார்களால் கடம் புறப்பாடு துவங்கியது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு விமான,கோபுரங்களுக்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்து மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !