உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: அன்னதானம் வழங்கல்

பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: அன்னதானம் வழங்கல்

லாலாபேட்டை: லாலாபேட்டை அடுத்த மத்திபட்டியில் பிடாரி அம்மன், கருப்பண்ணசாமி, மாரியம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்றுமுன்தினம் கோவில் கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்ற, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். முன்னதாக, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாத்துதல் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. அதன்பின்னர் முதல் கால யாக பூஜை துவங்கி சிறப்பு யாகங்களைத் தொடர்ந்து, சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், திரவியப்பொடிகள் கொண்டு சிறப்பு அபிசேகங்கள் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !