நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3448 days ago
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, கும்பாபிஷேகத்தில் நாமக்கல் எம்.பி., சுந்தரம் கலந்து கொண்டார். நாமகிரிப்பேட்டை அடுத்த, சின்ன அரியாகவுண்டம்பட்டியில் உள்ள இரட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக, யாகசாலை பூஜைகள் நடந்தன. கலசத்திற்கு பூஜைகள் நடத்தப்பட்டு, 10 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், நாமக்கல் எம்.பி. சுந்தரம் கலந்து கொண்டார். தொடர்ந்து தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன.