வடமதுரை முத்தாலம்மன் கோயில் திருவிழா
ADDED :3448 days ago
வடமதுரை: வேலாயுதம்பாளையத்தில் பகவதியம்மன், முத்தாலம்மன் கோயில் திருவிழா 5 நாட்கள் நடந்தது. பொங்கல் வைத்தல், மாவிளக்கு, முளைப்பாரி எடுத்தல், படுகளம் அமைத்து கழுகு மரம் ஏறுதல் போன்ற பாரம்பரிய வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் விளையாட்டு போட்டிகளும் நடந்தன. திருவிழாவின் இறுதி நாளில் முத்தாலம்மனை மஞ்சள் நீராட்டுடன் பூஞ்சோலைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது.