உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்தை., திரு இருதய அன்னை ஆலய நிறைவுப்பெருவிழா

சாத்தை., திரு இருதய அன்னை ஆலய நிறைவுப்பெருவிழா

சாத்தான்குளம் : சாத்தான்குளம் புனித மரியாயின் மாசற்ற திருஇருதய அன்னை ஆலய 150ம் ஆண்டு நிறைவுப்பெருவிழா நாளை நடக்கிறது. இன்று இரவு சப்பர பவனி நடக்கிறது. சாத்தான்குளம் புனித மரியாயின் மாசற்ற திரு இருதய ஆலய 150வது ஆண்டு பெருவிழா 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினசரி ஆலயத்தில் ஜெபமாலை திருப்பலி, நற்செய்தி நற்கருனை ஆசீர் மற்றும் வழிபாடுகள் நடந்து வருகிறது. 9ம் திருவிழாவான இன்று மாலை தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் க்கு வரவேற்பும் சிறப்பு மாலை ஆராதனையும் இரவு அன்னையின் திருவுருவசப்பரபவனியும் நடக்கிறது. நாளை காலை ஜெபமாலை முதல் திருவிருந்து விழா மற்றும் 150ம் ஆண்டு நிறைவு திருவிழா சிறப்புத் திருப்பலியும் பிஷப் இவான் அம்புரோஸ் தலைமையில் நடக்கிறது. மாலை திவ்ய நற்கருணைபவனியும் அருட்தந்தைகள் ஜெபநாதன், ஜெரா ல்டு ரவி அருளுரையும் நடக்கிறது. வரும் 12ம் தேதி சமபந்தி அசனவிருந்து நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சாத்தான்குளம் வட்டார முதன்மைகுரு எட்வர்ட் அடிகளார் உதவித்தந்தை வசந்தன் சகோதரர் ஸ்டார்லின் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !