திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனித்தேரோட்டம்
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலல் ஆனித்திருவிழாவில் முக்கிய விழாவான தேரோட் டம் நேற்று விமரிசையாக நடந்தது.இங்கு ஆனித்திருவிழா கடந்த 11ம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமி சன்னதிக்கு முன் உள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தினமும் சுவாமி அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். முக்கிய திருவிழாவான தேரோட்டம் நேற்று காலை துவங்கியது. அதிகாலை 3 மணியவில் சுவாமியும், அம்பாளும் திருத்தேரில் எழுந்தருளினர். இந்த ஆண்டு நடப்பது 512வது தேரோட்டம். தேரோட்டத்தில் நெல்லையப்பர் தேர், காந்திமதியம்மன் தேர், விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியன வடம் பிடித்து இழுக்கப்பட்டது. நெல்லையப்பர் தேர் மாலை 4.35 மணிக்கும், அம்பாள் தேர் மாலை 5.30 மணிக்கும் நிலைக்கு வந்தன. தொடர்ந்து அனைத்து தேர்களும் நேற்று மாலையில் நிலையம் சேர்ந்தன.