சேந்தமங்கலம் மாரியம்மன் கோவில் விழா
ADDED :3446 days ago
எருமப்பட்டி: சேந்தமங்கலம் தாலுகா, எருமப்பட்டி அடுத்த பொட்டிரெட்டிப்பட்டியில் உள்ள, சக்தி மாரிஅம்மன் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம், மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து, புனிதநீர் எடுத்து வந்து மாரியம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. நேற்று காலை, சக்தி மாரிஅம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தன அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும் நடந்தது. தொடர்ந்து, சக்தி மாரிஅம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை முதல் கோவிலில் மாவிளக்கு பூஜை மற்றும் பொங்கல் வைத்து பக்தர்கள் படைத்தனர்.