வன தேவதை திருவிழா: பக்தர்கள் மீது நடந்து கோவில் பூசாரி ஆசி!
ADDED :3495 days ago
பர்கூர்: பர்கூர் அடுத்த கொல்லப்பள்ளியில் வன தேவதை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பழங்குடியின மக்கள் கலந்து கொண்டு பூஜை பொருட்களை கொண்டு வந்தனர். திருவிழாவில் பக்தர்கள் மீது நடந்து கோவில் பூசாரி ஆசி வழங்கினார். விழாவை முன்னிட்டு காட்டில் உள்ள இலை மற்றும் பூக்களைக் கொண்டு வனதேவதைக்கு அலங்காரம் செய்திருந்தனர்.