உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்!

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான நேற்று, தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், உற்சவர் தெள்ளியசிங்கர் மாட வீதிகளை தேரில் வலம் வந்து அருள் பாலித்தார். திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் யோக நரசிம்மர் பிணி தீர்க்கும் பெருமாளாக அருள் பாலிக்கிறார். பிரம்மோற்சவம்;இந்த ஆண்டிற்கான நரசிம்ம பிரம்மோற்சவம், கடந்த 15ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 17ம் தேதி, கருடசேவை உற்சவமும், 19ம் தேதி, நாச்சியார் திருக்கோலம், அனுமந்த வாகன புறப்பாடும் நடந்தது.பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான நேற்று, தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன், உற்சவர் தெள்ளியசிங்கர் தேரில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து காலை, 7:00 மணிக்கு, தேர் வடம் பிடிக்கப்பட்டது. கோவிந்தா கோஷம்:ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா நாமத்துடன் வடம் பிடித்து, மாடவீதிகளை வலம் வந்தனர். காலை, 8:00 மணிக்கு, தேர் நிலைக்கு வந்தது. நாளை, லட்சுமி நரசிம்மர் திருக்கோலத்தில் பல்லக்கு உற்சவமும், வரும் 23ம் தேதி, தீர்த்தவாரி உற்சவமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !