உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம் வி.வி. நகர் நுாதன வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை 23ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேக விழா இன்று 22ம் தேதி காலை 9.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. மாலை 5.00 மணிக்கு முதல்கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து கும்பாபிஷேக விழா நாளை 23ம் தேதி நடக்கிறது. காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற் றும் கலிதீர்த்தாள்குப்பம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !