சோழவந்தானில் தீர்த்தவாரி உற்சவம்
ADDED :3426 days ago
சோழவந்தான்: சோழவந்தானில் வறண்ட வைகையில் வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்சவத்தில் எழுந்தருளிய ஜெனகை மாரியம்மனை பக்தர்கள் தரிசித்தனர்.
இக்கோயிலில் வைகாசி திருவிழா ஜூன் 6 ல் கொடியேற்றத்துடன் துவங்கி 17 நாட்கள் நடந்தது. நேற்று முன் தினம் விழா தீர்த்தவாரி உற்சவத்துடன் நிறைவுற்றது. இரவு 10.00 மணிக்கு கோயில் கம்பத்திலிருந்து இறக்கப்பட்ட கொடியை பூசாரி கணேசன் சுமந்து செல்ல, வைகை ஆற்றில் எழுந்தருளிய அம்மனை கிராமத் தலைவர் மணி முத்தையா, தேர் திருப்பணிக்குழுத் தலைவர் சுப்பிரமணியம், பள்ளித் தாளாளர் மருதுபாண்டியன், உபயதாரர் பால்பாண்டியன், அறநிலையத்துறை இணை கமிஷனர் பச்சையப்பன் மற்றும் பக்தர்கள் வரவேற்றனர். புஷ்பராஜ அலங்காரத்தில் அம்மன் பொன்னுாஞ்சலில் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி லதா, தலைமைகணக்கர் பூபதி செய்திருந்தனர்.