தில்லை காளியம்மன் கோவிலில் உண்டியல் வருவாய் ரூ. 5.61 லட்சம்
ADDED :3426 days ago
சிதம்பரம்: தில்லை காளியம்மன் கோவில் உண்டியலில் காணிக்கையாக 5.61 லட் சம் ரூபாய் கிடைத்துள்ளது.
சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ஐந்து உண்டியல்களை, செயல் அலுவலர் முருகன் முன்னிலையில் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் மதியம் கோவில் மகா மண்டபத்தில் நடந்தது. 5 லட்சத்து 60 ஆயிரத்து 972 ரூபாய் பணம், தங்கம் 289 கிராம், வெள்ளி பொருட்கள் 105 கிராம், 138 ரூபாய் மதிப்புள்ள வெளிநாடு கரன்சிகள் இருந்தன. இவற்றை, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள் சரி பார்த்து, கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் டெபாசிட்டாக செலுத்தப்பட்டது. கோவில் ஆய்வாளர்கள் சீனிவாசன், சொரிமுத்து, பழனியம்மாள் உடனிருந்தனர்.