ஆர்.கே.பேட்டை நாராயண பெருமாள் கோவிலில் நிறைவு பெற்றது பிரம்மோற்சவம்
ADDED :3426 days ago
ஆர்.கே.பேட்டை: அஷ்டலட்சுமி உடனுறை நாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நேற்று, தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.
வங்கனுார், அஷ்டலட்சுமி உடனுறை நாராயண பெருமாள் கோவில், ஆனி பிரம்மோற்சவம், கடந்த 17ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சிம்மம், அனுமந்தம், ஆதிசேஷன் என, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா எழுந்தருளினார். 20ம் தேதி, அதிகாலை 3:00 மணிக்கு கோபுர வாசலில் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்.தொடர்ந்து அன்று மாலை, யானை வாகனத்திலும், நேற்று முன்தினம் குதிரை வாகனத்திலும் உற்சவர் புறப்பாடு நடந்தது. நேற்று, தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெற்றது.