அவிநாசி கோவில் கும்பாபிஷேகம் விழா
ADDED :3428 days ago
அவிநாசி: செம்மாண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடைபெற்றது. கருமாபாளையம் ஊராட்சி, செம்மாண்டம்பாளையத்தில், ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில்களில், திருப்பணி நடந்தது.
கும்பாபிஷேக விழா, 21ல் துவங்கியது. கணபதி ஹோமத்துடன், நேற்று அதிகாலை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பூஜிக்கப்பட்ட கும்பங்கள், ஊர்வலமாக எடுத்து வரப்பபட்டு, கோபுர கலசங்கள், மூலவ மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. அதன்பின், மகாபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செம்மாண்டம்பாளையம், கருமாபாளைம், சூளை மற்றும் அவிநாசியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.