சுப்ரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
ADDED :3430 days ago
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை, சுப்ரமணிய சுவாமி கோவிலில், இரு உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். ஆய்வாளர் சுரேஷ், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராமசாமி, மற்றும் மாணவிகள், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை மேற்கொண்டனர். பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த 2 லட்சத்து 38 ஆயிரத்து 389 ரூபாய் பணம், கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.