கொளஞ்சியப்பர் கோவிலில் 17 கடைகள் ஏலம்
ADDED :3431 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் 17 கடைகள் ஏலம் விடப்பட்டன. விருத்தாசலம், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில், கடந்த 2012ம் ஆண்டில் 17 கடைகள் கட்டப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளாக அந்த கடைகள் பயன்பாட்டிற்கு வராமல் மூடிக்கிடந்தன. இது குறித்து தினமலர் நாளிதழில்செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, ஆய்வாளர் சுபத்ரா, செயல் அலுவலர் கொளஞ்சி, மேலாளர் குருநாதன் முன்னிலையில், நேற்று முன்தினம் கடைகளுக்கான ஏலம் நடந்தது. அதில், விரு த்தாசலம், மணவாளநல்லுார் பகுதியினர் 17 கடைகளை ஏலம் எடுத்தனர்.