கொம்புச்சாமிசமாது கோயில் கும்பாபிஷேக விழா
ADDED :3432 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் கொம்புச்சாமிசமாது கோயில் கும்பாபிஷேகவிழா நான்கு நாள்கள் நடந்தன. முதல்நாள் மஞ்சள் விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. இரண்டாம்நாள் காலை 8 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஆத்திவிநாயகர், சிவசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, வெள்ளியங்கிரி மற்றும் நந்தீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பிற்பகல் அன்னதானம் நடந்தது. மூன்றாம்நாள் 108 திருவிளக்குபூஜை நடந்தது. கடைசிநாளில் கவிதா சொற்பொழிவு ஆற்றினார். ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா, ஐந்துஊர் சாலியர் சமூக தலைவர் டாக்டர் ஆறுமுக பெருமாள், தோப்புபட்டிதெரு சாலியர் ஊர் உறவின்முறை தலைவர் சிவலிங்கம், பக்தர்கள் கலந்துகொண்டனர்.