இந்த சமயத்தில் பூஜை வேண்டாமே!
ADDED :3549 days ago
கோவில்களில் திருவிழா காலத்தில் உற்ஸவர் காலையிலும், மாலையிலும் வாகனங்களில் எழுந்தருள்வார். அப்போது உற்ஸவர் மூலவரின் அனைத்து சக்திகளையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு கோவிலை விட்டு வெளியே வருவதாக ஐதீகம். எனவே அந்த சமயத்தில் மூலவரை தரிசித்தல், அர்ச்சனை செய்தல், கோவிலை வலம் வருதல் ஆகியவை கூடாது என ‘சிவயோகி ஸம்வாதம்’ என்ற நுõலில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மூலவர் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் கோவில்களில் இந்த தரிசன விதி பொருந்தாது.