/
கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் தண்டலம் ஏரி காத்த நாகாத்தம்மன் கோவிலில் மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேகம்
திருப்போரூர் தண்டலம் ஏரி காத்த நாகாத்தம்மன் கோவிலில் மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேகம்
ADDED :5252 days ago
திருப்போரூர் : தண்டலம் ஏரி காத்த நாகாத்தம்மன் கோவிலில், மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேகம், கோலாகலமாக நடந்தது. வருஷாபிஷேகத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை விசேஷகணபதி ஹோமம், லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை நடந்தது. அதைத் தொடர்ந்து, விசேஷ பூஜையை, கோவில் நிர்வாகி சம்பத் துவக்கி வைத்தார். தென்காசி சாஸ்திரிகள் அனந்த நாராயணன், கோவில் அர்ச்சகர் கணேசன், தலைமையிலான குழுவினர், விசேஷ பூஜைகளை செய்தனர். பகல்12 மணிக்கு, அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. அதன் பின், மலர்அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.