உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதலியார்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

முதலியார்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி: முதலியார்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. முதலியார்பேட்டை சாமிநாதபிள்ளை வீதியில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், முத்துமாரியம்மன், பால விநாயகர், பால முருகர், சிவன்- அம்பாள், துர்கை, நவக்கிரகங்கள் மற்றும் புதிதாக முத்து சாய்பாபா சன்னதிகள், புதுப்பித்து கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி கடந்த 24ம் தேதி கும்பாபிேஷக பூஜைகள் துவங்கியது. மாலை 6:30 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜையும், இரவு பூர்ணாஹூதி நடந்தது. 25ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும், பூர்ணாஹூதியும் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, 10:00 மணியளவில் முத்துமாரியம்மன் கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மூலவர் கும்பாபிஷேகம், 10:20 மணிக்கு எஜமான உற்சவம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !