உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழா துவக்கம்

புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழா துவக்கம்

காரைக்கால்: காரைக்கால் புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழாவில், வரும் 4ம் தேதி மின் அலங்காரத் தேர் பவனி நடக்கிறது.  காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. சிறிய தேர்  பவனியுடன், ஆலயத்தை வலம் வந்து கொடி ஏற்றம் நடந்தது. அதைத்தொடர்ந்து ஆலய பங்கு குரு அந்தோணி லுார்துராஜ் தலைமையில் சிறப்பு  திருப்பலி நடந்தது. வரும் 5ம் தேதி வரை தினமும் திருப்பலி, சிறிய தேர்பவனி நடைபெறுகிறது. வரும் 4ம் தேதி மின் அலங்காரத் தேர் பவனி  நடக்கிறது. ஏற்பாடுகளை பங்கு குருக்கள் தலைமையில் புனித அந்தோணியார் இளைஞர் கூட்டமைப்பு மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !