ஆஞ்சநேயர் கோவிலில் தீ மிதி விழா
ADDED :3434 days ago
ஊத்துக்கோட்டை:கொட்டும் மழையில், ஆஞ்சநேய சுவாமி கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். பூண்டி ஒன்றியம், பெரிஞ்சேரி ஊராட்சியில் உள்ளது, ஆஞ்சநேய சுவாமி கோவில். நேற்று முன்தினம் மாலை, இக்கோவிலில், தீமிதி திருவிழா நடந்தது. இதில், பெரிஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். அப்போது, மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால், அதை பொருட்படுத்தாமல் பக்தர்கள் தீ மிதித்தனர். இரவு, உற்சவர் ஆஞ்சநேய சுவாமி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.