கடலுார் பாடலீஸ்வரர் கோவில் உண்டியல் வசூல் ரூ.7 லட்சம்
ADDED :3722 days ago
கடலுார்: கடலுார், பாடலீஸ்வரர் கோவில் உண்டியலில் 7 லட்சத்து 13 ஆயிரத்து 867ரூபாய் காணிக்கை வசூலானது. கடலுார், திருப்பாதிரிப்பு லியூரில் உள்ள பாடலீஸ்வரர் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதி முன்னிலையில் நடந்த இப்பணியில் வங்கி பணியாளர்கள், தன்னார்வலர்கள் 35 பேர் ஈடுபட்டிருந்தனர். உண்டியலில் காணிக்கையாக, அதில் 7 லட்சத்து 13 ஆயிரத்து 867 ரூபாய் ரொக்கம், 26 கிராம் தங்க நகைகள், 195 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன. கோவில் நிர்வாக அலுவலர் ரத்தினாம்பாள், ஆய்வர் கோவிந்தன் உடனிருந்தனர்.