விட்ட வாசல் பைரவருக்கு அஷ்டமி வழிபாடு பூஜை
ADDED :3433 days ago
சிதம்பரம்: நடராஜர் கோவிலில் உள்ள விட்ட வாசல் பைரவருக்கு அஷ்டமி சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது. இதனையொட்டி சன்னதியில் பைரவர் சிறப்பு ஹோமம், விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி மகான்யாசம், ருத்ரம், சமகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஹோமம், ஜப பாராயணம், தீபாராதனை நடந்தது. இதனைத்தொடர்ந்து காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் சபாநாயகர் கோவில் தீட்சிதர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வெங்கடேச தீட்சிதர் செய்திருந்தார்.