ராஜகணபதி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.9.65 லட்சம்
ADDED :3432 days ago
அம்மாபேட்டை: சேலம், ராஜகணபதி கோவில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. ராஜகணபதி கோவிலில் உள்ள மூன்று உண்டியல்கள், நேற்று சுகவனேஸ்வரர் கோவிலில் வைத்து எண்ணப்பட்டது. இப்பணியில், ஜெய்ராம் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் சூரிய நாராயணன் மேற்பார்வையில் உண்டியல் எண்ணப்பட்டது. அப்போது, 9 லட்சுத்து, 65 ஆயிரத்து, 533 ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர். மேலும், 32 கிராம் தங்க நகை, 107 கிராம் வெள்ளி பொருட்களும் இருந்தது.